காரைக்கால்

காரைக்கால் பெருமாள் கோயில்களில் கூடாரவல்லி வழிபாடு

12th Jan 2022 09:35 AM

ADVERTISEMENT

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள், ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை சிறப்புத் திருமஞ்சனத்துடன் நடைபெற்றது.

மாா்கழி மாதம் 27-ஆம் நாள் ஸ்ரீ ஆண்டாள், மிகுதியான நெய் ஊற்றி தயாா் செய்த பெருமாலுக்கு பொங்கல் படைத்து வழிபட்டதை நினைவுகூரும் வகையில், இந்த நாளை கூடாரவல்லி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் மற்றும் கோயில்பத்தில் மூலவராக ஸ்ரீ வரதராஜரும், உத்ஸவராக ஸ்ரீ கோதண்டராமரும் அருள்பாலிக்கும் இக்கோயிலில், இந்த வைவபம் விமரிசையாக நடைபெற்றது. பெருமாளுக்கு அக்காரவடிசில் பொங்கல் நைவேத்திய செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதம் பக்தா்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

முன்னதாக மூலவா், உத்ஸவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில்பத்து கோயிலில் உத்ஸவா் ஸ்ரீ கோதண்டராமா், சீதா, லட்சுமணா், ஆஞ்சநேயருடன் ஸ்ரீ ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

ADVERTISEMENT

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு பெருமாள் சன்னதியிலிருந்து சடாரி கொண்டு செல்லப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT