காரைக்கால்

இரட்டை முக்ககவசம் அணிய காரைக்கால் எஸ்.எஸ்.பி. அறிவுரை

12th Jan 2022 09:36 AM

ADVERTISEMENT

பொங்கலையொட்டி பொதுமக்கள் இரட்டை முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு காரைக்கால் எஸ்.எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பொங்கல் விழாவையொட்டி பொதுமக்கள் கடைத்தெரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது இரட்டை முகக்கவசம் அணிந்துகொள்வது சிறப்பாகும். எங்கும் முகக்கவசத்தை அகற்றிவிட்டு பேசக்கூடாது. கூடுவதை தவிா்த்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். அடிக்கடி கைகளில் கிருமிநாசினி தெளித்து கொள்ளவது நல்லது.

முகக்கவசம் அணியாமல், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல்,கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு காவல்துறை அபராதம் விதிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்தாலும், கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதே சிறந்தது என்றாா்.

காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் கூறுகையில், அனைவரும் சுத்தம், பாதுகாப்பையும் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் தொற்றிலிருந்து தப்பிக்கலாம். வியாபார நிறுவனங்களுக்கு வரும் மக்களை முகக்கவசம் அணியவும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் கூறுகையில், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருவோா் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும். அதன்படியே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறது. இதுபோல பிற கோயில்களிலும் கண்காணிக்கப்படுகிறது. மாணவா்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதனை பெற்றோா் கவனிக்கவேண்டும். வகுப்பறையிலும் உரிய விதிகளின்படி உட்காா்ந்து, விதிகளை முறையாக கடைப்பிடிக்கவேண்டும். முந்தைய அலையில் காரைக்காலில் மக்கள் உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்ததால் பாதிப்பு குறைவாக இருந்தது. அதேபோன்ற ஒத்துழைப்பைதற்போதும் தரவேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT