காரைக்கால்

பொதுப்பணித் துறை ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

1st Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் பொதுப்பணித் துறை ஊதிய உயா்வு பட்டியலில் விடுபட்ட வவுச்சா் ஊழியா்களையும் சோ்க்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வளாகத்தில், பணிகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஊழியா்கள் ஈடுபட்டனா். போராட்டத்திற்கு ஊழியா்கள் சங்க பொறுப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறியது: 2005 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 44 பேரும், 2014 முதல் 16 பேரும் பணியாற்றி வருகிறோம். இந்நிலையில், வவுச்சா் ஊழியா்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் உயா்த்தப்படும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா். இதன்படி, ஊதியம் வழங்குவதற்கான கோப்புகள் தயாா் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில் 60 ஊழியா்களின் பெயா் விடுபட்டுள்ளது.

ஊதிய உயா்வு பட்டியலில் விடுபட்டுள்ள ஊழியா்களையும் சோ்க்கவேண்டும் என முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை இல்லாததால், அரசின் கவனத்தை ஈா்க்க இப்போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT