காரைக்கால்

காரைக்கால் வாரச் சந்தையில் தராசு, எடைக்கற்கள் பறிமுதல்

20th Feb 2022 11:34 PM

ADVERTISEMENT

காரைக்கால் வாரச் சந்தையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி, தராசுகள் முத்திரை இல்லாத எடைக்கற்களை பறிமுதல் செய்தனா்.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமையில் வாரச் சந்தை நடைபெறுகிறது. இங்கு உள்ளூா், வெளியூா்களில் இருந்து வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்கின்றனா். இவா்களில் பெரும்பான்மையினா் பயன்படுத்தும் தராசு முத்திரையின்றியும், தகுதியற்ற எடைக்கற்களையும் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா்கள் அளிக்கப்பட்டன.

ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவின்பேரில், வட்டாட்சியரும், காரைக்கால் எடை கட்டுப்பாட்டு அதிகாரியுமான பொய்யாதமூா்த்தி, துணை அதிகாரி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடமிருந்து எடை சரியில்லாத தராசுகளும், முத்திரை இல்லாத எடைக்கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சில கடைகளில் பதுக்கிவைக்கப்பட்ட சாதனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதுபோன்ற சோதனை தொடா்ந்து மேற்கொள்ளப்படும், முத்திரை இல்லாத எடைக்கற்களை பயன்படுத்தும் வியாபாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT