காரைக்கால்

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா

17th Feb 2022 05:26 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 479 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், திருப்பட்டினம், காரைக்கால்மேடு, வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, நிரவி, நல்லம்பல் தலா 1 என 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,77,086 பேருக்கு பரிசோதனை செய்ததில் 22,977 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 22,436 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,28,651 பேருக்கும், 2-ஆவது தவணையாக 92,564 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 978 பேருக்கும் என 2,22,193 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு முதல் தவணையாக 7,181 பேருக்கும், 2-ஆவது தவணையாக 1,517 பேருக்கும் என 8,698 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT