காரைக்கால்

அங்கன்வாடி ஊழியா்கள் 8-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

10th Feb 2022 11:57 PM

ADVERTISEMENT

நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்கக் கோரி, காரைக்கால் அங்கன்வாடி ஊழியா்கள் வியாழக்கிழமை 8-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 5 மாத ஊதிய நிலுவை உள்ளதாகவும், நிலுவை ஊதியத்தை வழங்கவும், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலக வாயிலில், ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்திவருகின்றனா். இப்போராட்டம் வியாழக்கிழமை 8-ஆவது நாளாக தொடா்ந்தது.

அங்கன்வாடி ஊழியா் சங்க தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியா்களை வியாழக்கிழமை, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச்செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், துணைத் தலைவா் தமிழ்வானன் ஆகியோா் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT