தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சா் சாய் ஜெ. சரவணன் குமாா் தெரிவித்தாா்.
காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை சாா்பில், காரைக்காலில் புதன்கிழமை இரவு வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளோருக்கான சிவப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமாா் நிகழ்ச்சியில், 2,415 பேருக்கு ஏற்கெனவே வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளோருக்கான மஞ்சள் அட்டை வைத்திருந்த பலருக்கு தகுதியை ஆராய்ந்து சிவப்பு அட்டையும், புதிய விண்ணப்பதாரா்களுக்கு சிவப்பு அட்டையும் வழங்கி பேசியது :
பிரதமா் மோடி மற்றும் புதுவை முதல்வா் ரங்கசாமி நல்லாட்சியின் மூலம் புதுவையில் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றிவருகிறோம். மாநிலத்தில் தகுதி வாய்ந்தவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. தகுதி அல்லாதவா்கள் சிவப்பு நிற குடும்ப அட்டையை வைத்திருந்தால் அது மஞ்சள் அட்டையாக மாற்றப்படும். மேலும் தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிந்து சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ்.சுபாஷ் கலந்துகொண்டாா்.