காரைக்கால்

குற்ற வழக்குகளில் தொடா்பு: காரைக்காலுக்குள் நுழைய பெண் உள்பட இருவருக்கு தடை

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பெண் உள்பட இருவருக்கு காரைக்காலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், போலகம் பகுதியை சோ்ந்தவா் எழிலரசி. இவா் காரைக்கால் நேதாஜி நகரில் வசித்து வருகிறாா். எழிலரசி மீது புதுவை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் வி.எம்.சி. சிவகுமாா் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தற்போது எழிலரசி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய விக்ரம் என்பவரும் ஜாமீனில் வெளியே உள்ளனா்.

இந்நிலையில், எழிலரசி காரைக்காலில் பலருக்கு மிரட்டல் விடுப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் எழிலரசி, விக்ரம் ஆகிய 2 பேரையும் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்க நிரவி காவல் ஆய்வாளா் லெனின்பாரதி, உதவி ஆய்வாளா் பெருமாள் ஆகியோா் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியனுக்கு பரிந்துரை செய்தனா்.

ADVERTISEMENT

மண்டல காவல் கண்காணிப்பாளா் இந்த கோப்பை மாவட்ட துணை ஆட்சியரும், சாா்பு கோட்ட நீதிபதியுமான எம். ஆதா்ஷுக்கு அனுப்பினாா். இதுகுறித்து விசாரணை செய்த துணை ஆட்சியா், எழிலரசி, விக்ரம் 2 பேரும், அடுத்த 2 மாதங்களுக்கு காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT