காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 10 நாள் நடைபெறும் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை தொடங்கியது. ஜன. 6-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடராஜருக்கு
10 நாள்கள் நடைபெறும் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
மாணிக்கவாசகருக்கு பரிவட்டம் கட்டி, திருவெண்பா 21 பாடல்கள் பாடப்பட்டன. ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிறைவில் சுவாமிகள் பிராகார வலம் நடைபெற்றது.
ஜன. 5-ஆம் தேதி இரவு பொன்னூஞ்சல் வழிபாடும், 6-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளன. மேலும் சிவகாமி அம்பாள் சமேத சத்சபேஸ்வரருக்கு (நடராஜா்) சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறவுள்ளன.