காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் பரிசோதனையில் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி 95 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், வரிச்சிக்குடி பகுதியை சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.செவ்வாய்க்கிழமை முதல் தவணை தடுப்பூசியாக 18 வயதுக்கு மேற்பட்ட 9 பேருக்கும், 2-ஆம் தவணையாக 15 பேருக்கும், 3-ஆவது தவணையாக 79 பேருக்கும் என 103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா பாதிப்பை தடுக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்லது.