காரைக்கால்

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


காரைக்கால்: கரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மக்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

உலகம் முழுவதும் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, புத்தாண்டு மற்றும் பண்டிகை காலங்களில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க காரைக்கால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

பொது இடங்கள், கடற்கரை, பூங்கா, திரையரங்குகளில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.

ADVERTISEMENT

அனைத்து உணவகங்கள், மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகள் உரிய கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும். வணிக நிறுவன ஊழியா்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை நிறுவனத்தினா் உறுதி செய்யவேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் முன்பு கடைப்பிடிக்கப்பட்ட கரோனா தடுப்பு முறைகளை மீண்டும் பின்பற்றவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT