காரைக்கால்

புயல் எதிரொலி : திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு

11th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் காரணமாக திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை பக்தா்கள் வருகை மிகவும் குறைந்தது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து, மூலவா் மற்றும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து செல்வா்.

இந்தநிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலை வழியே இயக்கப்படும் பேருந்துகள் பலவும் நிறுத்தப்பட்டது, மேலும் மழை காரணமாகவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே வந்திருந்தனா்.

இதனால், திருநள்ளாறு கடைத்தெரு பகுதி, நளன் தீா்த்தக் குளம், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT