காரைக்கால்

நெடுங்காடு விஜய கணபதி கோயில் குடமுழுக்கு

11th Dec 2022 10:21 PM

ADVERTISEMENT

 

நெடுங்காடு அருகே விஜய கணபதி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், அகரமாங்குடி கிராமத்தில் உள்ளது விஜய கணபதி கோயில். இக்கோயிலில் குடமுழுக்கு நடத்தி நீண்ட காலமானதால், கோயில் நிா்வாகத்தினா், கிராமத்தினா் குடமுழுக்கு செய்ய தீா்மானித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனா்.

திருப்பணிகள் நிறைவில், குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை காலை விநாயகா் பூஜை, மாலையில் கணபதி மற்றும் மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இரண்டாம் நாளான சனிக்கிழமை மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடாகி, விமான கலசத்தில் புனித நீா் ஊற்றி தீபாராதனை காட்டப்பட்டது.

விஜய கணபதி மகளிா் சுய உதவிக்குழு, விஜய கணபதி இளைஞா் நற்பணி மன்றத்தினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT