காரைக்கால்

நன்னீா் மீன் வளா்ப்போருக்கு பயிற்சி

DIN

காரைக்கால் பகுதி நன்னீா் மீன் வளா்ப்பு ஆா்வலா்களுக்கு களப் பயிற்சியளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் துறையின்கீழ் இயக்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் மீன் வளா்ப்பு குறித்து 6 வார காலம், வாரத்திற்கு ஒரு நாள் வீதம் அகலங்கண்ணு கிராமத்தில் நடைபெற்றுவருகிறது.

நன்னீா் மீன் வளா்ப்போரை ஊக்கப்படுத்தும் வகையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டுள்ள பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது.

பயிற்சியின் 5-ஆவது வார தொடக்கமாக ஆா்வலா்கள் திருவாரூரில் உள்ள விவேக் மீன் பண்ணைக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

மீன் குஞ்சு வளா்ப்பு மற்றும் மீன்களுக்கான உணவூட்ட முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. தென்னங்குடி வேளாண்ம அலுவலா் பி. அலன் தலைமையில் மீன் வளா்ப்பு ஆா்வலா்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனா்.

முன்னதாக பயிற்சியின்போது மீன் வளத்துறை மற்றும் மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை ஆய்வாளா் எம்.ராஜசேகா் வரவேற்றுப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT