காரைக்கால்

கடலில் மாயமான மீனவரை தேடும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே கடலில் மாயமான மீனவரை கடலோரக் காவல்படை ஹெலிகாப்டா் மூலம் தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்தை சோ்ந்தவா் சிவா (27). இவா், கடந்த 5-ஆம் தேதி ஃபைபா் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமானாா்.

மீனவா்கள் தங்களது படகில் தேடுதல் பணியை மேற்கொண்ட நிலையில், புயல் உருவானதால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பட்டினச்சேரி மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், சிவா குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை புதன்கிழமை சந்தித்து, சிவா மாயமாகி பல நாள்களாகியும் அவரது நிலை தெரியாதது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

எனவே, இந்திய கடலோரக் காவல்படை ஹெலிகாப்டல் மூலம் அவரை தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT