காரைக்கால்

காரைக்காலில் நாளை ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (டிச.10) புதுவை ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுவை ஜிப்மா் மருத்துவமனையிலிருந்து ஒவ்வொரு துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம், மாதம் இரு முறை காரைக்காலில் நடத்தப்படுகிறது.

நிகழ் மாத சிறப்பு முகாம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

புற்றுநோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனா். இந்த வாய்ப்பை பொதுமக்கள் மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT