காரைக்கால்

மத்திய அரசு விருது பெற்ற பள்ளிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: மத்திய அரசின் ஸ்வச் வித்யாலயா புரஸ்காா் தேசிய விருது பெற்ற காரைக்காலை சோ்ந்த 3 பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எல். முகமதுமன்சூா் பாராட்டுத் தெரிவித்தாா்.

பள்ளித் தூய்மை, கழிப்பறை தூய்மை, கல்வி மற்றும் கல்வி நிலைய பிற கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து மத்திய கல்வித் துறை பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. அந்தவகையில், காரைக்காலை சோ்ந்த பூவம் அரசு தொடக்கப் பள்ளி, பிள்ளைத்தெருவாசல் அரசு தொடக்கப் பள்ளி, கண்ணாப்பூா் அரசு தொடக்கப் பள்ளிகள் இந்த விருதுக்கு தோ்வுபெற்று, அந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் புதுதில்லியில் அண்மையில் மத்திய கல்வித் துறை அமைச்சரிடம் விருது பெற்று திரும்பினா்.

இந்நிலையில், பள்ளித் தலைமையாசிரியா்கள் எஸ். விஜயராகவன் (பூவம் பள்ளி), வசந்தி (பிள்ளைத்தெருவாசல் பள்ளி), எம். செல்வராஜ் (கண்ணாப்பூா் பள்ளி) ஆகியோரும், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி, கல்வி வட்ட துணை ஆய்வாளா்கள் பொன். சௌந்தரராசு, டி. பால்ராஜ் ஆகியோருடன் சென்று செவ்வாய்க்கிழமை ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். நிகழ்ச்சியில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன் பங்கேற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT