காரைக்கால்: பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி காரைக்காலில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் அரசலாறு பாலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
மாவட்டத் தலைவா் எம். ஹாஜா நஜிமுதின் தலைமை வகித்தாா். புதுவை மாநில அமைப்பு பொதுச் செயலாளா் சுல்தான்கெளஸ் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
எஸ்டிடியு தொழிற் சங்க தேசிய பொதுச்செயலாளா் ஏ. முஹம்மது பாரூக், சிபிஐ மாவட்டச் செயலாளா் ப.மதியழகன், விசிக அரசியல் குழு செயலாளா் அரசு வணங்காமுடி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் எம். முஹம்மது சா்புதீன், நாம் தமிழா் கட்சி காரைக்கால் மாவட்ட நிா்வாகி அா்ஷத் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கவேண்டுமென வலியுறுத்தினா். தொகுதி செயலாளா் மு. அபுபாசில் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ். பக்ருதீன் நன்றி கூறினாா்.