காரைக்கால்

மாநில அறிவியல் கண்காட்சி: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: புதுவை மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் காரைக்கால் எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் படைப்பு சிறப்பிடம் பெற்றது. இதையொட்டி, இம்மாணவா்களை பாராட்டும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் பங்கேற்று, மேல்நிலைப் பள்ளி நிலையிலான அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற ந. பரத், உயா்நிலைப்பள்ளி நிலையில் 3-ஆவது பரிசு பெற்ற கே. சண்முகப்பிரியா, நடுநிலைப் பள்ளி அளவில் 3-ஆம் பரிசு பெற்ற எஸ்.ஆா். சுருதிகாஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டினா்.

ADVERTISEMENT

உலக மக்களுக்குத் தேவைப்படும் விதத்தில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவா்கள் முயற்சிக்கவேண்டுமென அப்போது அவா்கள் அறிவுறுத்தினா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT