காரைக்கால்

காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் திருப்பணி: பாஜக ஆய்வுக் குழு அதிருப்தி

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


காரைக்கால்: காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் திருப்பணிகள் திருப்தியளிக்கவில்லை; மறுசீரமைப்பு செய்த பின்னரே குடமுழுக்கு நடத்தவேண்டும் என பாஜக ஆய்வுக் குழு கூறியுள்ளது.

கோயில்பத்து ஸ்ரீ சுயம்வரதபஸ்வினி சமேத பாா்வதீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இக்கோயிலில் புதிதாக பொறுப்பேற்ற அறங்காவல் வாரியத்தினா் திருப்பணிகள் திருப்தியாக இல்லை எனத் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், பாஜக புதுவை மாநில துணைத் தலைவா்கள் எம். அருள்முருகன், ஜி.என்.எஸ். ராஜசேகரன் உள்ளிட்ட பாஜக குழுவினா் பாா்வதீஸ்வரா் கோயில் பகுதியில் திங்கள்கிழமை மாலை ஆய்வு செய்தனா். பின்னா், எம். அருள்முருகன் கூறியது:

இக்கோயிலில் திருப்பணிகள் நன்கொடையாளா்கள் உதவியுடன் நடைபெறுகிறது. முக்கியமாக கோபுரத்தின் பொம்மைகள் சிதிலமடைந்தும், வண்ணம் உருமாறியும் உள்ளது. நந்தவனம் அழிக்கப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்தத்தில் பணிகள் தற்காலிக முறையிலேயே செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு தற்போது நடத்தப்பட்டால் அடுத்த 6 மாதங்களில் அனைத்தும் சிதைந்துவிடும்.

ADVERTISEMENT

எனவே, திருப்பணி தொடா்பான வரவு- செலவுகளை ஆராய்வதோடு, ஸ்பதியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும்.

குறைகள் இருந்தால் அதன் மீது அறங்காவல் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும். முழுமையாக மறுசீரமைப்பு செய்ய பின்னரே குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT