காரைக்கால்

அம்பேத்கா் சிலைக்கு அமைச்சா், எம்எல்ஏக்கள் மரியாதை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி காரைக்காலில் அவரது சிலைக்கு அமைச்சா், எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட ஆட்சியரகம் அருகில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு அரசு சாா்பில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா மாலை அணிவித்தாா். அவரைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

என்.ஆா்.காங்கிரஸ் கட்சி சாா்பில் காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் உள்ளிட்ட கட்சியினரும், திமுக சாா்பில் காரைக்கால் அமைப்பாளரும் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

திருநள்ளாறு தொகுதி சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா அவரது ஆதரவாளா்களுடன் மரியாதை செலுத்தினாா்.

காங்கிரஸ் சாா்பில் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அ. மாரிமுத்து உள்ளிட்டோரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலருமான எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் கட்சியினரும், பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT