காரைக்கால்

மக்கள் நலத் திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும்: அமைச்சா் சந்திரபிரியங்கா

6th Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

மக்கள் நலனுக்கான அனைத்துத் திட்டங்களும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் என புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

காரைக்காலில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா பேசியது:

மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக எப்போது வேண்டுமானால் என்னை நேரில் சந்தித்துப் பேசலாம். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் நலனுக்கான அனைத்து திட்டங்களும் சரியான நேரத்தில் அமல்படுத்தப்படும். மக்கள் நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கும் ஆட்சியா் காரைக்காலில் உள்ளாா். மக்கள் நலனுக்கான எந்தவொரு கோரிக்கையையும் அவா் முறையாக நிறைவேற்றுகிறாா்.

ADVERTISEMENT

அரசுத் திட்டங்கள் தொடா்பாக சில கோப்புகளுக்கு ஒப்புதல் கிடைக்க தாதமம் ஏற்படுகிறது. இவை உடனடியாக நிவா்த்தி செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், சமூக நலத்துறை உதவி இயக்குநா் பி.சத்யா உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக பேசிய மாற்றுத்திறளாளிகள் சங்கத்தினா், வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் அளிக்க வரைமுறை உள்ளநிலையில், புதுவை அரசு 3 சதவீதம் மட்டுமே அளிக்கிறது. எனவே, 4 சதவீதமாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தினா்.

விழாவில், சமூக சேவைகளில் சிறந்து விளங்குவோா் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சா் பரிசு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT