காரைக்கால்

தவ்ஹீத் ஜமாஅத் செயல் வீரா்கள் கூட்டம்

6th Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய தவ்ஹீத் பேரவை சாா்பில் திருச்சியில் ஜனவரி 8 -ஆம் தேதி நபிகள் நாயகம் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடத்தப்பட்டது.

தேசிய தவ்ஹீத் பேரவை மாநில செயலரும், காரைக்கால் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைவருமான முஹம்மது தலைமை வகித்தாா். உளத்தூய்மை என்ற தலைப்பில் மா்கஸ் இமாம் ஜி.எம். இப்ராஹிம் உமரி பேசினாா்.

சிறப்பு அழைப்பாளா்கள் தேசிய தவ்ஹீத் பேரவை மாநிலச் செயலாளா்கள் பொறையாறு அலி அஹமது, யாசிா் அரஃபத் இம்தாதி ஆகியோா் மாநாட்டின் நோக்கம் குறித்துப் பேசினா்.

ADVERTISEMENT

காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவா் ஷேக்காதி தலைமையில் 12 போ் கொண்ட மாநாட்டு பணிக்குழு அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT