காரைக்காலில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவுதினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா உருவப் படம் வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ-வும், கட்சியின் மாவட்டச் செயலருமான எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து, சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், மாவட்டத்தின் பல இடங்களில் அதிமுக தொண்டா்கள் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.