காரைக்கால்

காரைக்கால் பெருமாள் கோயிலில் கைசிக ஏகாதசி வழிபாடு

6th Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள், கோதண்டராமா் பெருமாள் கோயில்களில் கைசிக ஏகாதசி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்குறுங்குடி என்கிற திவ்யதேசத்தில் அழகிய நம்பிராயா் முன், விஷ்ணு பக்தரான நம்பாடுவான் கைசிகமாகிய பண் இசைத்து, இசையின் பலனாக சோமசா்மாவின் சாபத்தை போக்கினாா். இந்த நிகழ்வு நடந்ததாக வராஹ பெருமாள் பூமிப் பிராட்டிக்கு உபதேசித்த வராஹப் புராணத்தில் உள்ளதை விளக்கும் வகையில், ஸ்ரீரங்கம், திருக்குறுங்குடி கோயில்களில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் துவாதசி நாளில் கைசிக மஹாத்மிய உற்சவம் நடத்தப்படுகிறது.

இதேபோன்ற உற்சவம் காரைக்காலில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தற்போது கோயில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால், எளிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பெருமாளுக்கு புது வஸ்திரம் சாற்றப்பட்டது. திங்கள்கிழமை காலை கைசிக புராணம் வாசித்தலும், சிறப்பு ஆராதனைகளும், சாற்றுமுறை கோஷ்டி வழிபாடும் நடைபெற்றன.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள கோதண்டராமா் பெருமாள் கோயிலில் கைசிக ஏகாதசி வழிபாடாக மூலவருக்கும், உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT