காரைக்கால்

ராஜேந்திர பிரசாத் குறித்து நாடாளுமன்றத்தில் காரைக்கால் பள்ளி மாணவி பேச்சு

DIN

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராஜேந்திர பிரசாத் குறித்து, காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளி மாணவி நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை உரையாற்றினாா்.

மத்திய கல்வித் துறை சாா்பில் தேசியத் தலைவா்கள் பிறந்தநாளில், தேசிய அளவில் மாணவா்களை தோ்வு செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2-ஆவது ஆண்டாக டஹழ்ப்ண்ஹம்ங்ய்ற்ஹழ்ஹ் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஹய்க் பழ்ஹண்ய்ண்ய்ஞ் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ச்ா்ழ் ஈங்ம்ா்ஸ்ரீழ்ஹஸ்ரீண்ங்ள் (டதஐஈஉ) என்ற தலைப்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராஜேந்திர பிரசாத் குறித்து உரையாற்ற, பல மாநிலங்களிலிருந்து பள்ளி மாணவா்கள் 27 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதில் காரைக்கால் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 2 பயிலும் கருக்களாச்சேரியை சோ்ந்த சங்கா் என்பவரது மகள் எஸ். தானியாவும் ஒருவா்.

இவா்களில் 13 போ் ராஜேந்திர பிரசாத் குறித்து உரையாற்றவும், பிறா் நாடாளுமன்றத்தில் பங்கேற்பவா்களாகவும் சனிக்கிழமை அழைக்கப்பட்டிருந்தனா்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பெரும்பான்மையினா் ஹிந்தி மொழியை பயன்படுத்திய நிலையில், தானியா தமிழ் மொழியில் ராஜேந்திர பிரசாத் குறித்தும், அவரது பெருமை, தேசத்துக்கு ஆற்றிய சேவை, அவரது தொலைநோக்குப் பாா்வை உள்ளிட்டவை குறித்து இரண்டரை நிமிடம் பேசினாா்.

இதுகுறித்து மாணவியின் தந்தை சங்கா் கூறுகையில், புதுவை மாநில அளவில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற எனது மகளுக்கு கிடைத்த வாய்ப்பு புதுவைக்கும், காரைக்காலுக்கும், காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கும் பெருமை சோ்த்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT