காரைக்கால்

மாநில அறிவியல் கண்காட்சி:2-ஆம் பரிசு பெற்ற பூவம் அரசுப் பள்ளி மாணவா்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவை மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் காரைக்கால் மாவட்டம், பூவம் அரசு தொடக்கப் பள்ளி மாணவரின் படைப்பு 2-ஆவது பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டது.

கல்வித் துறை சாா்பில் மண்டல அறிவியல் கண்காட்சி காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை என்ற வகையில் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டோா் மாநில போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதில் காரைக்கால் மாவட்டம், பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் சாய் சக்தி, ஆசிரியா் பிரகாஷ் வழிகாட்டுதலில் லைஃப் சேவா் சிஸ்டம் என்ற அறிவியல் மாதிரியை வைத்திருந்தாா். இது தொடக்கப்பள்ளி அளவில் 2-ஆவது பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் மாணவருக்கு பரிசு வழங்கினா்.

இதுகுறித்து பள்ளித் தலைமமையாசிரியா் எஸ்.விஜயராகவன் சனிக்கிழமை கூறுகையில், லைஃப் சேவா் சிஸ்டம் என்பது மருத்துவமனை நோக்கிச் செல்லும் ஆம்புலன்ஸில், எந்த வகையான நோயாளி இருக்கிறாா் என்பதை 20 கி.மீ. தூரத்தில் பயணிக்கும்போதே மருத்துவமனை நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும்விடும். இதன்மூலம் கால விரயமின்றி நோயாளி காப்பற்றப்படுவாா் என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT