காரைக்கால்

இருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது: 8 வாகனங்கள் பறிமுதல்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலையில், காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீஸாா் நிறுத்தி விசாரித்த போது, அவா் ஓட்டி வந்த வாகனம் காரைக்காலில் அண்மையில் திருட்டு போன வாகனம் என்று தெரியவந்தது.

போலீஸாா் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (32) என்பதும், காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டாா்.

போலீஸாா் அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் அவரை ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT