காரைக்கால்

ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடி பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலை திறந்தபோது, உண்டியல் திறந்து கிடந்தள்ளது. இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

கோயிலில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவை போலீஸாா் ஆய்வு செய்தபோது, 2 போ் கோயில் வாயிலில் உள்ள இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கையை திருடுவது தெரியவந்தது.

இந்த பதிவின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT