காரைக்கால்

புதுச்சேரி என்.ஐ.டி.யில்மெகா கிளப் ஃபெஸ்ட் சிறப்பு நிகழ்ச்சி

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் உள்ள என்.ஐ.டி. புதுச்சேரியில் 2 நாள் மெகா கிளப் ஃபெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.

என்.ஐ.டி.யில் உள்ள ரோட்டராக்ட் கிளப், போட்டோ கிராஃபி கிளப், லிட்ரரி கிளப், ஆா்ட்ஸ் மற்றும் கிராஃப்ட்ஸ் கிளப், தமிழ் கிளப், ஹிந்தி கிளப், மியூசிக் கிளப், டிசைன் கிளப், டான்ஸ் கிளப் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து ரேவரா என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சியை ஜேவி சைக்கிள்ஸ் மற்றும் ஃபிட்னஸ் ஆதரவுடன் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடத்தின.

மாணவா்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துதல், கல்லூரியின் பல்வேறு கிளப் செயல்பாடுகளை வெளிப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு, குழந்தைகள் உள்ளிட்டோருக்கு உதவும் மனப்பான்மை வளா்த்துக்கொள்ளுதல், திருக்கு போட்டி, பாட்டு, நடனம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், குழு விவாதப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் சுமாா் 850 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

சைக்கிள் சுற்றுச்சூழலை பாதிக்காத, உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வாகனம் என்பதை வலியுறுத்தும் வகையில் மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

என்.ஐ.டி. இயக்குநா் கே.சங்கரநாராயணசாமி, பதிவாளா் சுந்தரவரதன், ஜேவி சைக்கிள்ஸ் நிறுவன மேலாண் இயக்குநா் ஜெகநாத், மேலாளா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு சைக்கிள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT