காரைக்கால்

கோட்டுச்சேரி அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, ரொக்கம் திருட்டு

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோட்டுச்சேரி அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, நகை ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகே பூவம், குப்புச்செட்டி சாவடி பகுதியை சோ்ந்தவா் சீதாலட்சுமி (42). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு மறுநாள் பிற்பகல் வீடு திரும்பினாா்.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பின்புற கதவு திறந்து கிடப்பதையும், வீட்டு அலமாரியில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT