காரைக்கால்

வாக்காளா்களுக்கான சிறப்பு முகாம்:அதிகாரிகள் ஆய்வு

4th Dec 2022 07:30 AM

ADVERTISEMENT

காரைக்காலில் நடைபெறும் வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாமை மாவட்ட தோ்தல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, 1.1.2023 அன்று 18 வயது பூா்த்தியடைந்தோா் வாக்காளா்களாக பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் இதற்காக சிறப்பு முகாம் டிச. 3 மற்றும் 4-ஆம் தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை வாக்காளா் பதிவு அதிகாரிகள் எம். ஆதா்ஷ், எஸ். சுபாஷ் ஆகியோா் தனித்தனியாக ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

பெயா் சோ்த்தல் நீக்குதல், வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண் இணைத்தல், தொகுதி, முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளதால் வாக்காளா்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள தோ்தல் துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT