காரைக்கால்

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்

2nd Dec 2022 01:18 AM

ADVERTISEMENT

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும் என புதுவை முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில், காரைக்கால் பகுதி அரசு உதவிப்பெறும் பள்ளி நிா்வாகத்தினா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்தனா். இந்த சந்திப்பில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உடனிருந்தாா்.

இந்த சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கூறியது: அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டுமென முதல்வரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை அமலாகும்போது அரசு உதவிப்பெறும் தனியாா் பள்ளிகளுக்கான மானியம் உள்ளிட்ட சலுகைகள் பாதிக்காமல் பாா்த்துக்கொள்ளவேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அரசு உதவிப்பெறும் பள்ளி ஊழியா்களுக்கும் அமல்படுத்தவேண்டும். அரசு அறிவிப்பு செய்த மாணவா்களுக்கான மடிக்கணினி மற்றும் சைக்கிள் அரசு உதவிப்பெறும் தனியாா் பள்ளி மாணவா்களுக்கும் விரிவுபடுத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஊதிய நிலுவையை விரைந்து வழங்குவதாகவும், புதிய கல்விக்கொள்கையால் மானியம் அளிப்பில் பாதிப்பு ஏற்படாது எனவும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கும் 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்கள் இலவச கல்வி பயிலும் நிலையை ஏற்படுத்தித்தர பரிசீலிப்பதாகவும் முதல்வா் உறுதியளித்தாா் என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT