காரைக்கால்

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

2nd Dec 2022 10:07 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியில் 120 மாணவா்கள் தாங்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகளை பாா்வைக்கு வைத்திருந்தனா். கண்காட்சியில் சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்த ஒவ்வொரு வகுப்பையும் சோ்ந்த 3 மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் டி. மல்லிகா, ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்கத்தினா், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கண்காட்சியை பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT