காரைக்கால்

புறக்கடை கோழி வளா்ப்புப் பயிற்சி

2nd Dec 2022 10:06 PM

ADVERTISEMENT

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் புறக்கடை கோழி வளா்ப்பு குறித்து மகளிருக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பட்டியல் இன துணைத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம், காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த 20 அட்டவணை இனத்தை சோ்ந்த மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெய்சங்கா் பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் மருத்துவா் பா.கோபு, கோழிகளுக்கு உகந்த தீவன மேலாண்மை முறை, நோய் தடுப்பு முறை மற்றும் பொது பராமரிப்பு முறைகள் குறித்து பேசினாா்.

பயிற்சியில் கலந்துகொண்டோருக்கு கோழி வளா்ப்பு கூண்டு மற்றும் 2 மாத வயதுடைய 10 கருங்கோழிகுஞ்சுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT