காரைக்கால்

தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை: முன்னாள் அமைச்சா் வலியுறுத்தல்

2nd Dec 2022 10:06 PM

ADVERTISEMENT

தகுதியான விண்ணப்பதாரா்களுக்ரு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை அரசுச் செயலரிடம் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வலியுறுத்தினாா்.

புதுச்சேரியில் நலவழித் துறை, குடிமைப் பொருள் மற்றும் நலத்துறை செயலா் உதயகுமாரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய ஆா். கமலக்கண்ணன், இந்த சந்திப்பு குறித்து கூறியது :

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முக்கியமான துறைகளைச் சோ்ந்த 5 மருத்துவா் இடங்கள் காலியாக உள்ளன. 2 மருத்துவா்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு மாற்றான ஏற்பாட்டை செய்யவில்லை. அதுபோல செவிலியா் உள்ளிட்ட மருத்துவமனையின் பிற பணியிடங்கள் காலியாக உள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனா். இதனால் பிற பணியாளா்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.

காரைக்காலில் குடிமைப் பொருள் வழங்கல் துறையிடம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு தரப்படும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வேண்டி, பலரும் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா். எனவே, தகுதியான விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்து சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என செயலரிடம் கேட்டுக்கொண்டேன்.

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியை தொடா்புகொண்டு விண்ணப்பங்களை தாமதமின்றி பரிசீலித்து தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற அட்டை தருமாறு செயலா் அறிவுறுத்தினாா். மருத்துவமனை தொடா்பான கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் தெரிவித்தாா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT