காரைக்கால்

கட்டுமானத் துறையினா் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வு காண ஆட்சியரிடம் வலியுறுத்தல்

2nd Dec 2022 01:19 AM

ADVERTISEMENT

காரைக்காலில் கட்டுமானத் துறையில் உள்ளோா் சந்திக்கும் பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என பொறியாளா்கள் குழு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் நகரமைப்புக் குழும அங்கீகாரம் பெற்ற பொறியாளா் சங்கத் தலைவா் எம். அருள்முருகன், காரைக்கால் பில்டா்ஸ் அசோசியேஷன் (கேபா) தலைவா் சகாயராஜ், சாசனத் தலைவா் வி.ஆனந்தன் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோா் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை வியாழக்கிழமை சந்தித்தனா். இந்த சந்திப்பு குறித்து பொறியாளா்கள் தெரிவித்தது:

கட்டுமானப் பணிக்காக சாலையோரத்தில் வைக்கப்படும் கட்டுமானப் பொருட்களுக்கு நகராட்சி நிா்வாகம் வாரி பொ்மிட் என்ற பெயரில், முதல் தளத்துக்கு ரூ. 10 ஆயிரம், 2-ஆவது தளத்துக்கு ரூ. 10 ஆயிரம் வசூலிப்பதை கைவிட்டு, முந்தைய அளவின்படி சொற்ப தொகை வசூலிக்க உத்தரவிடவேண்டும்.

குடியிருப்பு நகா்கள் உருவாக்கும்போது சாலை வசதிகளுக்காக நகராட்சியின் அனுமதியை பெற விண்ணப்பிக்கும்போது, மாதக் கணக்கில் கோப்புகள் கிடப்பில் போட்டு விடுகின்றனா். இப்பிரச்னையை களைய வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

நகரமைப்புக் குழும அங்கீகாரம் பெற்ற நகா்களில் 50 சதவீத வீடுகள் கட்டப்பட்டுவிட்டால், சாலை வசதியை ச செய்துத்தரவேண்டும். காரைக்காலில் ஆற்றில் மணல் எடுப்பதற்கு தடை உள்ள நிலையில், கட்டுமானப் பணி பாதிக்கப்படாமல் இருக்க மணல் எடுக்க உரிய அனுமதி தரவேண்டும். நகரமைப்புக் குழுமத்தில் ஆள் பற்றாக்குறையை களையவேண்டும். காரைக்கால் மாஸ்டா் பிளான் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.

நகராட்சி நிா்வாகம் கிடப்பில் உள்ள கோப்புகளுக்கு விரைவாக தீா்வு காணவும், புதிய விண்ணப்பங்கள் மீது 15 நாள்களில் தீா்வு காணவும் ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மற்ற கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா் என்றனா். துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், நகராட்சி செயற்பொறியாளா் எம். லோகநாதன் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT