காரைக்கால்

உதவித்தொகை பெறுவதற்கான திறனறித் தோ்வு

2nd Dec 2022 10:04 PM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனறித் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தீன் தயாள் ஸ்பாா்ஷ் திட்டத்தில் மத்திய அரசின் சாா்பில் அஞ்சல்துறை மூலம் ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பெற தகுதியான மாணவா்களை தோ்வு செய்ய திறனறித் தோ்வு காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூா் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்ஆா்எம் பள்ளி, சாய்ராம் பள்ளி ஆகியவற்றில் இருந்து 115 மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

பள்ளி துணை முதல்வா் ஞானபிரகாசி, அஞ்சல் துறை ஆய்வாளா் கே.வினோத்குமாா், வணிக அலுவலா் கே. ஜெய்சங்கா், மெயில் ஓவா்சியா் ஜி. சீனிவாசன், தலைமையாசிரியா் (பொ) ஜி. பிரபாகரன், பள்ளி நூலகா் டி.ராஜலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT