காரைக்கால்

காரைக்கால் ஆட்சியருடன் ரெட் கிராஸ் நிா்வாகிகள் சந்திப்பு

2nd Dec 2022 10:06 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட ஆட்சியரை ரெட் கிராஸ் நிா்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை, புதுவை மாநில ரெட் கிராஸ் தலைவா் ஜி. லட்சுமிபதி, துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து சோழசிங்கராயா் கூறுகையில், மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னா் பல்வேறு மக்கள் பிரச்னைகள் மீது சிறப்பு கவனம் செலுத்திவருவது குறித்தும், கடற்கரை மேம்பாட்டுக்கான நடவடிக்கை எடுத்துவருவது குறித்தும் ஆட்சியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ரெட் கிராஸ் சாா்பில் புதுச்சேரி, காரைக்காலில் ரத்த வங்கி அமைப்பது குறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து ஆதரவு கோரியிருந்தோம். காரைக்காலில் ரத்த வங்கி அமைப்பது குறித்து ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT