காரைக்கால்

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம்

2nd Dec 2022 01:19 AM

ADVERTISEMENT

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (டிச.2) புதுச்சேரி சிறப்பு மருத்துவா் குழுவினா் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறப்பு மருத்துவா்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தருகின்றனா்.

இதனடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நரம்பியல், இருதயவியில், சிறுநீரகவியல், குழந்தை அறுவைச் சிகிச்சை ஆகிய சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனா். எனவே, காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT