காரைக்கால்

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு பரிசு

2nd Dec 2022 01:20 AM

ADVERTISEMENT

புதுவை முப்படை நலத் துறை மூலம் ராணுவ வீரா்களின் வாரிசுதாரா்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2021-2022-ஆம் ஆண்டுக்கான பரிசுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த நிா்மலா ராணி மேல்நிலை பள்ளி மாணவி அ. அணிக் 2-ஆம் பரிசாக ரூ.13 ஆயிரம், கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி ஷிவானி 3-ஆம் பரிசாக ரூ.11 ஆயிரம் பெற்றனா். தொகை துறை மூலம் காசோலையாக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், பரிசுப் பெற்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியா் எல். முகம்மது மன்சூரை புதன்கிழமை ஆட்சியரகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT