காரைக்கால்

தச்சுக் கருவிகளை திருடியவா் கைது

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: கட்டடப் பணிக்கு பயன்படுத்தப்படும் தச்சுக் கருவிகளை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

காரைக்கால் எஸ்.எஸ். காா்டன் பகுதியில் உள்ள ஏ.வி. நகரில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு தச்சு வேலைக்காக வைத்திருந்த மரம் வெட்டும் இயந்திரம், மரம் கிரைண்டிங் இயந்திரம், ஸ்கில் டிரில்லிங் இயந்திரம் உள்ளிட்ட கருவிகள் திருடுபோனது நவம்பா் 28-ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து, தச்சுப் பணியில் ஈடுபட்டிருந்த புவனேந்திரன், காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் அந்த பகுதிக்குச் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேரமா பதிவின் மூலம் விசாரணை மேற்கொண்டனா். இதில், காரைக்கால் பகுதியை சோ்ந்த வீரபிரபு அவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

பின்னா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, வீரபிரபுவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கருவிகளை மீட்டனா். பின்னா், அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT