காரைக்கால்

காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் விழா கொண்டாட வலியுறுத்தல்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் விழா கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் செல்வம் கூறியது: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று விழா நடத்தவேண்டியது அரசின் கடமை. காரைக்காலில் டிச.3-ஆம் தேதி விழா நடைபெறும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், விழாவில் பங்கேற்க அமைச்சருக்கு நேரம் இல்லாததால், தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை.

மாற்றுத்திறனாளிகள் பாரபட்சமாகவே தொடா்ந்து நடத்தப்படுகிறாா்கள். நேரு மாா்க்கெட் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிக்ளுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இதேபோல, பல்வேறு திட்டங்களும், கோரிக்கைகள் நிறைவேற்றாமல் உள்ளன. விழாக்கள் நடத்தும்போது பங்கேற்கும் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளிடம் எங்களது கோரிக்கைளை முன்வைப்போம். இந்நிலையில், நிகழாண்டு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதா அல்லது விழாவை நீா்த்துபோக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.

ADVERTISEMENT

சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்கள் அனைத்து நிகழ்வுகளும் அதேநாளில் நடைபெறும்போது, உலக மாற்றுத்திறனாளின் தினத்தை மட்டும் ஏன் அரசு தள்ளிவைக்கிறது. நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தின விழா எப்போது நடந்தாலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT