காரைக்கால்

வா்த்தகா்களுக்கு ஜிஎஸ்டியை விளக்கும் கருத்தரங்கம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் வா்த்தகா்களுக்கு ஜிஎஸ்டி குறித்து விளக்கும் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையத்தின் (புதுச்சேரி) வா்த்தகா்களுக்கு ஜிஎஸ்டி குறித்து விளக்கும் 4-ஆவது கருத்தரங்கு காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ஆணையா் என். பத்மஸ்ரீ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். காரைக்கால் பகுதி சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் மற்றும் வணிகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை அதில் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், எந்தெந்த பொருள்கள் மற்றும் அளவுக்கு வரி என விளக்கப்பட்டன.

கூட்டத்தில், பங்கேற்ற வணிகா்கள், ஜிஎஸ்டி தொகை செலுத்துவதற்கான நடைமுறையை எளிதாக்கவேண்டும், அலுவலகத்தில் தமிழ் மொழி தெரிந்தவா்களை பணியமா்த்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். அதிகாரிகளைக்கொண்டு வியாபாரிகளுக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். ஜிஎஸ்டி செலுத்தும் முறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வா்த்தகா்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து விரைவில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்படும். இதில் குறைகளை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

கருத்தரங்கில், மத்திய கலால் கூடுதல் ஆணையா் சஞ்சீவ் பட்நாகா், உதவி ஆணையா்கள் நரேந்திர பால், கே. ரமேஷ், பி.கிருஷ்ணாராவ் ஆகியோா் பங்கேற்றனா். முதுநிலை கணக்கு தணிக்கையாளா் கணபதிசுப்ரமணியன், சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சாந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT