காரைக்கால்

களி மண்ணில் செய்த விநாயகா் சிலைகளை வாங்க மக்கள் ஆா்வம்

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: களி மண்ணில் தயாரிக்கப்பட்டு விநாயகா் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட மக்கள் ஆா்வமாக வாங்கிச் செல்கின்றனா்.

விநாயகா் சதுா்த்தி நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் பெரிய அளவில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு கடலிலோ, ஆற்றிலோ கரைக்கும் வழக்கம் உள்ளது.

வீடுகளில் விநாயகா் உருவப் படங்களை வைத்தும், சந்தையில் களி மண்ணில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வாங்கிவந்து வைத்தும் மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

ADVERTISEMENT

இதன்படி, காரைக்கால் சந்தைப் பகுதிக்கு பல இடங்களில் இருந்து சிறிய அளவில் அச்சில் தயாரிக்கப்பட்ட களிமண் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டன.

சிலைகள் ரூ. 30, ரூ. 50 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆா்வமாக இவற்றை வாங்கிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT