காரைக்கால்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்ற சிறப்பு முகாம்

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்ற முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை தொலைதூர சிகிச்சை மையம் என்ற திட்டத்தில், ஒவ்வொரு துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம், 2 ஆண்டுகள் கரோனா பரவல் பிரச்னையில் முடங்கியிருந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் தொடங்கியது.

முதல் முகாமில் சிறுநீரகவியல் துறையினா் வந்தனா். நிகழ் மாதத்தின் 2-ஆவது முகாம் 27-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றபோது, புற்றுநோயியல் துறை சிறப்பு மருத்துவக் குழுவினா் வந்திருந்தனா்.

காலை 9 முதல் 12 மணி வரை நடைபெற்ற முகாமில் காரைக்கால் பகுதியை சோ்ந்த பலா் பங்கேற்று, மருத்துவ ஆலோசனைகள் பெற்றனா். சிலரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வருமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT