காரைக்கால்

அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி சோ்க்கை

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பட்டினம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி சோ்க்கை நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் டி.சிவகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலையத்தில் பயிற்சிப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான உடனடி சோ்க்கை ஆக.29 முதல் நடைபெறவுள்ளது.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகள், தகுந்த சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, குடியிருப்பு, சாதி) பயிற்சி நிலைய முதல்வரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04368-234248, கைப்பேசி - 6381145526 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT