காரைக்கால்

பணிநிரந்தரம் கோரி தற்காலிக ஊழியா்கள் முதல்வருக்கு கடிதம்

26th Aug 2022 01:41 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகத்திதல், 100 நாள் வேலைத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி ஊழியா்களாக பணியாற்றிவரும் ஊழியா்கள், தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி புதுவை முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

காரைக்கால் தலைமை அஞ்சலகத்தில் கூடிய ஊழியா்கள், கடிதம் அனுப்பிவிட்டு கூறியது: புதுவை நிதிநிலை அறிக்கையில் அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுவோா் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என முதல்வா் கூறியதற்கு சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்தில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். வயது, குடும்ப சூழலை கருத்தில்கொண்டு, இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றனா்.

இப்போராட்டத்துக்கு, அதன் சங்கத் தலைவா் பழனிவேல் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், துணைத் தலைவா் சந்தனசாமி, அலுவலக செயலாளா் புகழேந்தி, துணைப் பொருளாளா் திவ்வியநாதன், செயலாளா் ராஜேஷ், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச்சங்கத் தலைவா் ஜான் பிரிட்டோ ஆகியோா் போராட்டத்தை ஆதரித்து பேசினா். சங்க செயலாளா் ஆனந்தி, பொருளாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT