காரைக்கால்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் கவனத்துக்கு...

26th Aug 2022 01:44 AM

ADVERTISEMENT

 

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்கள், 29-ஆம் தேதிக்குள் பிளஸ் 1 சோ்க்கைக்கான விண்ணப்பத்தை அளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு ஜூலை, ஆகஸ்ட் 2022 சிறப்பு துணைத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்கள், காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதலாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை, ஆக. 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் துணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும்.

ADVERTISEMENT

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா்களும், இதுவரை விண்ணப்பித்து எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காத மாணவா்களும் மற்றும் புதுச்சேரி மாநில குடியுரிமை இல்லாத மாணவா்களும் இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வு செப்.1-ஆம் தேதி காலை 10 மணிக்கு தலத்தெரு பகுதியில் உள்ள மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT