காரைக்கால்

ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்:உள்ளாட்சி ஊழியா்கள் 200 போ் கைது

26th Aug 2022 01:43 AM

ADVERTISEMENT

காரைக்கால் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியா்களுக்கு வழங்கியது போல் 1.1.2016 முதல் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம், பதவி உயா்வு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மாத ஊதியம், ஓய்வூதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டு போராட்டக் குழு சாா்பில், ஊழியா்கள் 4 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் 4-ஆம் நாளான வியாழக்கிழமை 12.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT

போராட்டத்துக்கு காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டு போராட்டக் குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT